சாதி மறுப்பு திருமணத்தால் ஆத்திரம் - மணமகன் குடும்பத்தினர் மீது தாக்குதல்

கோவையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட மகளை கடத்தியதோடு மணமகன் குடும்பத்தினரும் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாதி மறுப்பு திருமணத்தால் ஆத்திரம் - மணமகன் குடும்பத்தினர் மீது தாக்குதல்
x
கோவை துடியலூர்  இடையர் பாளையத்தை  சேர்ந்த கார்த்திகேயன் திருச்சியை சேர்ந்த சக்தி தமிழினி பிரபா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த 5ஆம் தேதி கோவையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு கார்த்திகேயன் வீட்டில் ஒப்புதல் தெரிவித்த போதும் பெண் வீட்டினர் ஏற்றுக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே கோவைக்கு வந்த பெண் வீட்டார், கார்த்திகேயன் மற்றும் அவரது தாய் வசந்தகுமாரியை தாக்கிவிட்டு சக்தி தமிழினி பிரபாவை காரில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன், துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன் மனைவியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உடனே அவரை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்