கீழடி அகழாய்வில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுப்பு - தொல்லியல் ஆய்வில் மைல் கல் என ஆய்வாளர்கள் பெருமிதம்

கீழடி அகழாய்வின் ஒரு பகுதியாக கொந்தகையில் குழந்தையின் எலும்புக் கூடு ஒன்றை தொல்லியல் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
கீழடி அகழாய்வில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுப்பு - தொல்லியல் ஆய்வில் மைல் கல் என ஆய்வாளர்கள் பெருமிதம்
x
கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வு கொந்தகை, மணலுர், அகரம், கீழடி உள்ளிட்ட நான்கு இடங்களில் நடைபெற்று வருகிறது. சுமார் 40 லட்ச ரூபாய் செலவில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் இந்த பணிகள் நடந்து வரும் நிலையில் கொந்தகையில் சுரேஷ் என்பவரின் நிலத்தில் 10 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் தொடர்ந்து நடந்த அகழாய்வில் குழந்தையின் எலும்புக்கூடு ஒன்று கண்டறியப்பட்டது. இது 3ஆம் நிலை என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதோடு, தொல்லியல் துறையில் இது பெரும் மைல்கல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்