மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை - மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் , கையாடல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை - மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை
x
இது தொடர்பாக மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் மேலாண் இயக்குனர் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு  மது பானங்கள் விற்பனை செய்யும் கடை ஊழியர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இனி வரும் நாட்களில் முதுநிலை மண்டல மேலாளர்கள், வாரத்திற்கு 10 சில்லறை கடைகளை ஆய்வு செய்து, கூடுதல் விலைக்கு மது பானங்களை  விற்பனை செய்யும் பணியாளர்களை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். உத்தரவுகளை பின்பற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் எச்சரித்துள்ளார்.
=======

Next Story

மேலும் செய்திகள்