16 வயது சிறுமியை கடத்திய திருமணமான இளைஞர் - போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே மூலனூரில் சிறுமியை கடத்தியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 வயது சிறுமியை கடத்திய திருமணமான இளைஞர் - போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு
x
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே மூலனூரில் சிறுமியை கடத்தியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.  தாராபுரம் அடுத்த மூலனூர் ஆசிரியர் காலனியில் வசிப்பவர் பூபதி. இவர், கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்த நிலையில், அவரது  மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார்.  இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயது பெண்ணை, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடந்த 4 நாட்களுக்கு முன் கடத்தி சென்றுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரி  பேரில் தனிப்படை அமைத்து தேடிய போலீசார், ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சிறுமியை மீட்டனர். கைது செய்யப்பட்ட பூபதி,  வன்கொடுமை சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்