பிரபல நடிகையின் காரில் மது பாட்டில்கள் பறிமுதல் - ஓட்டுனரை கைது செய்த போலீசார்

பிரபல நடிகையின் காரில் மது பாட்டில்கள் பறிமுதல் ஓட்டுனரை கைது செய்த போலீசார்
பிரபல நடிகையின் காரில் மது பாட்டில்கள் பறிமுதல் - ஓட்டுனரை கைது செய்த போலீசார்
x
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள முட்டுக்காடு சோதனைச் சாவடியில், கடந்த வியாழக்கிழமை இரவு வாகனச் சோதனை செய்துக் கொண்டிருந்த கானத்தூர் போலீஸார் அந்தவழியாக வந்த TN 07 சி. கியூ. 0099 என்ற பதிவெண் கொண்ட இன்னோவா சொகுசு காரை சோதனையிட்டனர். அப்போது காரில்100 க்கும் அதிகமான பாட்டில்கள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கார் ஓட்டுனரான சென்னை அபிராமபுரத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே அந்தக் கார் நடிகை ரம்யாகிருஷ்ணனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்