சாமியார் ஏவிய கொரோனாவை அழிக்க கோரிக்கை - மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த கிராம மக்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பண்ணைப்பட்டி என்ற கிராமத்தில், தங்கபாண்டி என்ற சாமியார் குறி சொல்வது பரிகார பூஜை நடத்துவது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார்.
சாமியார் ஏவிய கொரோனாவை அழிக்க கோரிக்கை - மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த கிராம மக்கள்
x
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பண்ணைப்பட்டி என்ற கிராமத்தில், தங்கபாண்டி என்ற சாமியார் குறி சொல்வது பரிகார பூஜை நடத்துவது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். இளம் பெண்கள் சிலரின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து மிரட்டி இவர் பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து புகார் அளித்தால் கொரோனாவை ஏவிவிட்டு கிராமத்தையே அழித்து விடுவேன் என மிரட்டிய தங்கபாண்டி, கடந்த சில நாட்களாக ஏதோ மர்மமான பொடியை வீதிகளில் தூவிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சி வருகின்றனர். எனவே தங்கள் ஊரில் கிருமி நாசினி தெளித்து சாமியார் ஏவிய கொரோனாவை அழிக்க வேண்டும் எனவும் சாமியார் தங்கபாண்டியை கைது செய்ய வேண்டும் எனவும் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் அளித்தனர். இந்த நூதன புகாரால் இப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்