"மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு" - முதலமைச்சர்

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதோடு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
x
வரும் 15ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கு கல்வியாளர்கள் உட்பட பல தரப்பில் இருந்து எதிர்ப்பு வலுத்தது. இதனிடையே பொதுத்தேர்வு தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல கட்ட ஆய்வுகளை மேற்கொண்டார். இதையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அவர் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவதாகவும் கூறினார். காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீதம் மற்றும் வருகைப் பதிவின் அடிப்படையில் 20 சதவீதம் மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் 11ஆம் வகுப்பு விடுபட்ட பாடங்களுக்கான தேர்வும் ரத்து செய்யப்படுவதாக கூறிய அவர், 12ஆம் வகுப்பு விடுபட்ட பாடங்களுக்கான பொதுத்  தேர்வு சூழலுக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்