ஜூன் 15ல் 10ம் வகுப்புத் தேர்வுகள் : அனுமதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

பத்தாம் வகுப்பு தேர்வை ஜூலை இரண்டாவது வாரத்திற்கு தள்ளிவைக்கலாமா என்பது குறித்து பிற்பகலுக்குள் தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஊரடங்கு காரணமாக ஜூன் 15ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டன.

* இந்நிலையில், தொற்று பரவல் குறையாததால், தேர்வுகளை 2 மாதங்களுக்கு தள்ளிவைக்கக் கோரி, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

* வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்வு நடத்துவதில் தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன் என கேள்வி எழுப்பியது.

* தனிமனித இடைவெளி பின்பற்றப்படும் என்றும்,
தேர்வு எழுத வரும் மாணவர்களின் பாதுகாப்பு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும்
அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

*இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்ததுடன், கொரோனா தொற்று பரவல் குறைந்த பின் தேர்வு நடத்தலாம் என்று அறிவுறுத்தினர்.

* மேலும், ஜூலை 2வது வாரத்தில் தேர்வு நடத்தலாமா என்பது குறித்து பிற்பகல் 2.30 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Next Story

மேலும் செய்திகள்