அண்ணா பல்கலை கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் : சிறப்பு அந்தஸ்தை ஏற்க முடியாத நிலை - அமைச்சர் அன்பழகன்

இட ஒதுக்கீடு, மாணவர் சேர்க்கை உள்ளிட்ட தற்போதைய நடைமுறைகள் பாதிக்காது என உறுதி அளிக்காததால் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் சிறப்பு அந்தஸ்து அங்கீகாரத்தை ஏற்க முடியாத நிலை உருவாகி உள்ளதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்
அண்ணா பல்கலை கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் :  சிறப்பு அந்தஸ்தை ஏற்க முடியாத நிலை - அமைச்சர் அன்பழகன்
x
இட ஒதுக்கீடு, மாணவர் சேர்க்கை உள்ளிட்ட தற்போதைய நடைமுறைகள் பாதிக்காது என உறுதி அளிக்காததால், அண்ணா பல்கலைக் கழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் சிறப்பு அந்தஸ்து அங்கீகாரத்தை ஏற்க முடியாத நிலை உருவாகி உள்ளதாக  அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார் நாடு முழுவதும் சிறந்த அரசு உயர்கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் மத்திய அரசும், அதே அளவிற்கு மாநில அரசும் நிதி அளித்து அந்த உயர் கல்வி நிறுவனத்தை உலக தரத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டமாகும். இந்த அடிப்படையில் அண்ணா பல்கலைக் கழகம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள 69 சதவிகித இட ஒதுக்கீடு, தற்போதைய மாணவர் சேர்க்கை நடைமுறை உள்ளிட்ட சில விவகாரங்கள் பாதிக்காது என்பதை எழுத்துப் பூர்வமாக மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. இதை மத்திய அரசு ஏற்காத நிலையில், சிறப்பு அங்கீகாரம் பெறுவதற்கான கால அவகாசம் மே இறுதியுடன் முடிவடைந்தது . இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், சிறப்பு அங்கீகாரத்தை பெறுவதற்கு அரசு தயாராகவே இருப்பதாகவும்,  மத்திய அரசு உரிய விளக்கம் தராத நிலையில், அதனை ஏற்க முடியாத நிலை உருவாகி உள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்