நாளை கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் - ஆடம்பர நிகழ்வுகள் கூடாது என ஸ்டாலின் அறிவுறுத்தல்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் கொண்டாட தி.மு.க.வினர் தயாராகி வரும் நிலையில், சமூக ஒழுங்கினைக் கடைபிடித்து, அவரவர் இடங்களில் தேவையானவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்து கருணாநிதியின் புகழை போற்ற கட்சி நிர்வாகிகளுக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
நாளை கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் - ஆடம்பர நிகழ்வுகள் கூடாது என ஸ்டாலின் அறிவுறுத்தல்
x
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் கொண்டாட தி.மு.க.வினர் தயாராகி வரும் நிலையில்,  சமூக ஒழுங்கினைக் கடைபிடித்து, அவரவர் இடங்களில் தேவையானவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்து கருணாநிதியின் புகழை போற்ற கட்சி நிர்வாகிகளுக்கு, தி.மு.க. தலைவர்  மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதியின் உருவப்படம் மற்றும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்த செல்லும் போது,  அணிதிரள வேண்டாம் என்றும், கருணாநிதி பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என்றும் தொண்டர்களை ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்