கொரோனா பாதிப்பிலும் அழியாத மனிதாபிமானம் - பிச்சைக்காரர் உடலுக்கு இறுதி சடங்கு செய்த மக்கள்
பதிவு : ஜூன் 01, 2020, 08:58 AM
சென்னை போரூரில், சாலையோரம் இறந்து கிடந்த பிச்சைக்காரருக்கு அப்பகுதி மக்கள் இறுதி சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னை போரூர் மேம்பாலத்தின் கீழே  ஆதரவற்றோர், பிச்சைக்காரர்கள் வசித்து வருகின்றனர். ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு அப்பகுதி மக்கள் தான் தினமும் உணவு வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் 15 வருடங்களாக அங்கு பிச்சை எடுத்து வந்த நபர் ஒருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.  இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கொரோனாவால் உயிரிழந்தாரா என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர் கொரோனாவால் உயிரிழக்கவில்லை என்பது உறுதியானது. 15 வருடங்களாக அங்கு பிச்சை எடுத்து வசித்தவர் உயிரிழந்ததை அறிந்த அப்பகுதி மக்கள்,  அவரின் உடலுக்கு இறுதி சடங்கு செய்ய முடிவு எடுத்தனர்.போலீசாரின் அனுமதியோடு அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து பிச்சைக்காரரின் சடலத்திற்கு மாலை அணிவித்து, பாடையில் வைத்து ஊர்வலமாக சுமந்து சென்றனர். போரூர் மின் மயானத்தில் அவரின் உடலை பொதுமக்கள் தகனம் செய்தனர்.


கொரோனா அச்சம் காரணமாக, குடும்பத்தில் ஒருவர் இறந்தாலே, அஞ்சி ஓடும் இந்த சூழ்நிலையில், தங்கள் பகுதியில் பிச்சை எடுத்த பிச்சைக்காரரின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த இப்பகுதி மக்களின் பாசம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பரோட்டாவுக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேஷம் போட்டவர் கைது

சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேஷம் போட்டு சிக்கியவரின் கதையை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

86 views

பிற செய்திகள்

அழிவின் பிடியில் மேற்கு தொடர்ச்சி மலை- பாதுகாக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு - பள்ளி மாணவியை பாராட்டும் சமூக ஆர்வலர்கள்

அழிவின் பிடியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை பாதுக்காக்க குன்னூரை சேர்ந்த பள்ளி மாணவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

13 views

தன்னார்வல அமைப்பு சார்பில் 500 மரக்கன்றுகள்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த பனஞ்சேரி கிராமத்தில், தன்னார்வல அமைப்பு சார்பில் இலவச மரக்கன்று வழங்கப்பட்டது.

13 views

இன்று கூடுகிறது, தமிழக அமைச்சரவை - நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு என தகவல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

72 views

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 328 பேருக்கு தொற்று

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.

37 views

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம்

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 15ம் தேதி முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்கிறார்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.