பூட்டிய வீட்டுக்குள் உயிரிழந்த வயதான தம்பதிகள் : கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கலாம் என அச்சம்

சென்னை, சூளைமேட்டில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த வயதான தம்பதிகள் பூட்டிய வீட்டுக்குள் மரணம் அடைந்ததால் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
x
சூளைமேடு, கில்நகர்  பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர்கள் ஜீவன், தீபா தம்பதியினர்.  80 வயதான ஜீவன் புரசைவாக்கம் பகுதியில் கடை நடத்தி வருவதாகவும், அவர்களுக்கு குழந்தைகள் இல்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகமடைந்த நிலையில், அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல்,  தம்பதியினர் வீட்டுக்குள்ளேயே பூட்டிக் கொண்டு இருந்துள்ளனர். 2 நாட்களுக்கு பின்னர் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார், வீட்டை உடைத்து பார்த்தபோது தம்பதியினர் இருவரும் படுக்கையில் இறந்து கிடந்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில்,  சுகாதார ஊழியர்கள் மிகுந்த பாதுகாப்புடன் உடலை அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்