ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும், அரசுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும், அரசுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
x
கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், மேட்டூர் அணை திறப்பதற்கான முன்னேற்பாடு குறித்தும் சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  ஆலோசனை நடத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். மேலும், கொரோனா இல்லாத மாவட்டமாக சேலம் மாறி உள்ள நிலையில், அடுத்தகட்ட  நடவடிக்கை குறித்தும், இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற  இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  ஆர்.எஸ்.பாரதி கைது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு, முதலமைச்சர்  கண்டனம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்