சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் 44 % வருவாய் இழப்பு - சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் தகவல்

ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இதுவரை 44 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பை சந்தித்துள்ளன என சென்னை ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் 44 % வருவாய் இழப்பு - சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம்  தகவல்
x
ஊரடங்கால் தமிழகத்தில் உள்ள சிறு, குறு  மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பாதிப்புகள் குறித்தும்  ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் உள்ள 30 லட்சத்திற்கும் அதிகமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்  முடங்கியுள்ளன. 

* இந்த நிலையில் சென்னை ஐ.ஐ.டி யில் செயல்படும், மானுடவியல் துறையின் சார்பில்   தமிழகத்தில் இயங்கி வரக்கூடிய இந்த நிறுவனங்கள் எத்தகைய பாதிப்பை சந்தித்துள்ளன, பாதிப்பில் இருந்து  நீண்ட  மற்றும் குறுகிய காலத்திற்குள் அந்த நிறுவனங்கள்  மீள்வதற்கு  எத்தகைய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி விரிவான அறிக்கை தயாரிக்க உள்ளது.

* இதற்காக தமிழ்நாடு சிறு, குறு  மற்றும் நடுத்தர தொழில் மையம், கோவை மற்றும் மதுரையில் இயங்கி வரும் சிறு தொழில்கள் கூட்டமைப்புகள் உடன் இணைந்து இந்த ஆய்வை  சென்னை ஐ.ஐ.டி. மானுடவியல் துறை மேற்கொள்ள உள்ளது. 

* நான்கு வாரத்தில்  இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. 

* ஊரடங்கு காரணமாக தற்போது வரை  தமிழகத்தில் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்கள் 44 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பை சந்தித்து உள்ளதாகவும், இது  மேலும்  நீட்டிக்கப்படும் போது  வருவாய் இழப்பு  60சதவிகிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது  என்றும் சென்னை ஐ.ஐ.டி தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்