10ஆம் வகுப்பு தேர்வு பணிகள் - தேர்வுத்துறை மும்முரம் : தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தேர்வு மையங்கள் எத்தனை?

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில் , தேர்வுக்கான ஏற்பாடுகளில் தேர்வுத்துறை இறங்கியுள்ளது .
10ஆம் வகுப்பு தேர்வு பணிகள் - தேர்வுத்துறை மும்முரம் : தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தேர்வு மையங்கள் எத்தனை?
x
ஜூன் 1ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்வுக்கான ஆரம்ப கட்ட பணிகளில் தேர்வுத்துறை இறங்கியுள்ளது .  முதல் கட்டமாக கொரோனாவால்  தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அருகில் உள்ள தேர்வு மையங்களின் விவரங்களை உடனடியாக அனுப்புமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மூவாயிரத்திற்கும் அதிகமான மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள சூழலில் பல்வேறு விவரங்கள் அடங்கிய அறிக்கையை உடனடியாக ஆய்வு செய்து தேர்வுத் துறைக்கு அறிக்கை  அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்