3வது நாளாக திருமழிசை சந்தையில் காய்கறி விற்பனை - வரத்து குறைவால் உயர்ந்த காய்கறிகளின் விலை

திருமழிசை சந்தையில் 3வது நாளாக காய்கறி விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
3வது நாளாக திருமழிசை சந்தையில் காய்கறி விற்பனை - வரத்து குறைவால் உயர்ந்த காய்கறிகளின் விலை
x
இந்த சந்தைக்கு நேற்று 5 ஆயிரம் டன் காய்கறிகள் வந்த நிலையில் இன்று 3 ஆயிரத்து 500 டன் காய்கறிகள் மட்டுமே வந்துள்ளன. வரத்து குறைந்ததால் ஒரு சில காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.  அதேநேரம் சந்தையில் முக கவசம் இன்றி சுற்றித்திரிந்த வியாபாரிகளை போலீசார் எச்சரித்து அனுப்பினர். மேலும் கோயம்பேடு சந்தையில் ஏற்பட்ட பிரச்சினை போல இங்கும் ஏற்படாமல் இருக்கும் வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்