"அந்தமான் நிகோபார் பகுதியில் 16ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் நிகோபார் பகுதியில் 16ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
அந்தமான் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வரும் 13ஆம் தேதி முதல் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என்பதால், வரும் 16ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் காவிரி டெல்டா மற்றும் தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அந்த மையம் கூறியுள்ளது. குமரிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு ஒட்டி உள்ள மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் திருத்தணி, கரூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், பகல் நேரத்தில் மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் அந்த மையம் அறிவுறுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்