10 ஆம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை - முன்விரோதம் காரணமாக நடந்த வெறிச்செயல்

தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் 10ஆம் வகுப்பு சிறுமி, பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 ஆம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை - முன்விரோதம் காரணமாக நடந்த வெறிச்செயல்
x
திருவெண்ணெய்நல்லூரை அடுத்த சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். அவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில்,ஜெயபால் வீட்டிற்குள் இருந்து திடீரென புகை வருவதை பார்த்த அக்கம்பக்கத்தினர்,அங்கு சென்று பார்த்தபோது, அவரது 15 வயது மகள் ஜெயஸ்ரீ, உடலில் தீக்காயங்களுடன் எரிந்து கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடலில் தீக்காயம் அதிகமாக இருந்ததால், சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார்.முன்னதாக மாணவி அளித்த வாக்குமூலத்தில், தன்னை இரண்டு பேர் கட்டிபோட்டு தீ வைத்ததாக கூறியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்