மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த 970 பேர் - அரசு பேருந்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் பணிபுரிந்து வந்த தமிழகத்தை சேர்ந்த 962 பேர், கேரளாவை சேர்ந்த 8 பேர் என மொத்தம் 970 பேர் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வந்தடைந்தனர்.
மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த 970 பேர் - அரசு பேருந்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
x
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் பணிபுரிந்து வந்த தமிழகத்தை சேர்ந்த, 962 பேர், கேரளாவை சேர்ந்த 8 பேர் என மொத்தம் 970 பேர் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வந்தடைந்தனர். அவர்களை வரவேற்ற, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, அவர்களுக்கு தேவையான முக கவசம், உணவு, தண்ணீர் பாட்டில்களை வழங்கினர். அனைவரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு 30 அரசு பேருந்து மூலம் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டனர். சிறப்பு ரயிலில் வந்தவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் வைத்து பரிசோதனை மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்