கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் - ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழக பொருளாதாரம் குறித்து ஆராய்ந்து, ஆலோசனைகள் வழங்க நியமிக்கப்பட்டுள்ள உயர்நிலை குழுவில் தொழில்துறையினர், அரசியல் கட்சியினரும் இடம்பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் - ஸ்டாலின் வலியுறுத்தல்
x
* தமிழக பொருளாதாரம் குறித்து ஆராய்ந்து ஆலோசனைகள் வழங்க , ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையிலான உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

* அந்த குழுவில் 24 பேர் இடம்பெற்றிருந்தாலும், அனைவரும் தொழிலதிபர்கள் மற்றும் அதிகாரிகளாவே உள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

* சட்டமன்றத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்
கட்சிகளின் பிரதிநிதிகள்கூட நியமிக்கப்படவில்லை என்பது ஆச்சரியமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

* சிறு, குறு தொழில் நிறுவனங்கள், அமைப்பு சாரா தொழில் துறையினர்,  விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள் என பல துறை பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

* வேலை இழப்பு அதிகரித்து வரும் நிலையில், வரி வருவாயைப் பெருக்கும் நோக்கில் மட்டும் செயல்படாமல்,  மீட்பு - நிவாரணம் - மறுவாழ்வு என்கிற அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்



Next Story

மேலும் செய்திகள்