"புதிய மின்சார திருத்தச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" - மு.க.ஸ்டாலின்

மத்திய அரசின் புதிய மின்சார திருத்தச் சட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
x
மத்திய அரசின் புதிய மின்சார திருத்தச் சட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் இந்த சட்டம் விவசாயிகளின் இலவச மின்சாரத் திட்டத்திற்கும், ஏழை - நடுத்தர மக்களுக்கு நூறு யூனிட் வரை வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார். மாநிலங்களை ஓரங்கட்டி, அதிகாரங்களை மையப்படுத்திக் கொள்ளும் அடுத்த கட்டமான இந்தச் சட்டத் திருத்தத்தை, மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் மின்சாரத்தை "மத்திய அரசு மயமாக்கும்" இந்தச் சட்டத்தை அ.தி.மு.க. அரசு கடுமையாக எதிர்த்திட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்