கோயம்பேட்டில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா - தொற்று பாதித்தவருடன் கிரிக்கெட் விளையாடிய 59 பேருக்கு பரிசோதனை
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த எப்.கீழையூர் காலணி பகுதியை சேர்ந்த நான்கு பேர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து ஊர் திரும்பிய நிலையில் அவர்களில் இருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த எப்.கீழையூர் காலணி பகுதியை சேர்ந்த நான்கு பேர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து ஊர் திரும்பிய நிலையில், அவர்களில் இருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, ஊர் திரும்பியவர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த 59 பேரும் தற்போது கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

