"சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படாது" - தமிழக அரசு திட்டவட்டமாக அறிவிப்பு

சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.
x
கொரோனா ஊரடங்கு 3-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நாளை மறுதினம் டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. சமூக இடைவெளி உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளுடன், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடைகள் திறக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை மாநகரில், மதுக்கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுக்கடைகள் திறக்க அனுமதியில்லை என்றும் மறுதேதி அறிவிக்கும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் எனவும் அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்