தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் திறப்பு...

தமிழகத்திலும் டாஸ்மாக் மதுபானக்கடைகளை 44 நாட்களுக்கு பிறகு, மே 7-ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது
x
* கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தமிழகத்தில் மார்ச் 24 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன

* மத்திய அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்ததால் கர்நாடகா, டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மே 4ஆம் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டன. 

* இந்நிலையில், தமிழகத்திலும் டாஸ்மாக் மதுபானக்கடைகளை 44 நாட்களுக்கு பிறகு, மே 7-ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது

* இது தொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

* கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், 

* எனவே எல்லைப்பகுதியில் உள்ள மதுக்கடைகளுக்கு அதிக அளவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் செல்வதாகவும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* இதனால் மாநிலங்களுக்கு இடையே மக்கள் நடமாட்டடத்தை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுவதாகவும், 

* இவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் மே 7ஆம் தேதி முதல் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* மதுக்கடை பார்கள் திறக்கப்படாது என்றும், நோய்கட்டுபாட்டு பகுதியில் உள்ள மதுபானக்கடைகள் திறக்கப்பட மாட்டாது எனவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. 

* மதுபானக்கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், 

* நபர்களுக்கு இடையே 6 அடி தூர இடைவெளி இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது. 

* ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கூட அனுமதிக்க கூடாது என்றும், 

* காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அனைத்து கடைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

* ஏற்கனவே பகல் 12 முதல் இரவு 10 மணி வரை 
என 10 மணி நேரம் டாஸ்மாக் கடைகள் இயங்கிய நிலையில், தற்போது 7 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்து. Next Story

மேலும் செய்திகள்