திருவல்லிக்கேணியில் சிறுவர்கள் உட்பட 18 பேருக்கு கொரோனா - தொடர்ந்து உயரும் எண்ணிக்கையால் மக்கள் அச்சம்

சென்னையில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துள்ள நிலையில் திருவல்லிக்கேணியை சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவல்லிக்கேணியில் சிறுவர்கள் உட்பட 18 பேருக்கு கொரோனா - தொடர்ந்து உயரும் எண்ணிக்கையால் மக்கள் அச்சம்
x
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக சென்னை மக்கள் பெருமளவில் அச்சமடைந்துள்ளனர். கொரோனா தொற்று எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் திருவல்லிக்கேணியில் இரண்டு தெருக்களில் 3 மற்றும் 7 வயது சிறுவர்கள் உட்பட 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் தட்டாங்குளம் பகுதியில்  ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஒருவர் வாயிலாக 13 பேருக்கும் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சின்மயா நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட ஏழு பேருக்கும், கோடம்பாக்கம் காமராஜர் காலனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து நபர்களுக்கும் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்