பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை அழிப்பது தொடர்பான வழக்கு - "சம்மந்தப்பட்ட நீதிமன்றங்கள் முடிவு செய்யலாம்" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் உத்தரவு

தமிழகத்தின் அனைத்து குற்றவியல் நீதிமன்றங்களில் வைக்கப்பட்டு உள்ள மதுபாட்டில்களை அழிப்பது தொடர்பாக அந்தந்த நீதிமன்றங்கள் முடிவெடுக்கலாம் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
x


தமிழகம் முழுவதும்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  வேடசந்தூரில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்களை திருட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இதுபோன்ற முயற்சிகளில்  ஈடுபட வாய்ப்பு உள்ள நிலையில், அனைத்து குற்றவியல் நீதிமன்றங்களிலும்,  வைக்கப்பட்டுள்ள 
மதுக்களை அழிப்பது தொடர்பாக  அந்தந்த நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மதுப்பாட்டில்கள் அழிக்கப்படும் நிகழ்வுகளை புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்து கொள்ளவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.  மேலும் இந்த வழக்கு விசாரணைகளின் போது நீதிபதிகள் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை ஆதாரமாக கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்