"பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பொது நுழைவுத்தேர்வு நடத்தலாம்" - யூஜிசி-க்கு சிறப்பு குழு பரிந்துரை

பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளில் இளநிலை, முதுகலை, ஆராய்சி படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு பொதுநுழைவுத்தேர்வு நடத்தலாம் என சிறப்பு குழு யூஜிசிக்கு பரிந்துரைத்துள்ளது.
x
பல்கலைக் கழக மானியக் குழு சார்பில், கொரோனா காலத்தில் கல்வித்துறையில் அடைந்த பாதிப்புகள் குறித்து ஆராய, துணைவேந்தர்கள் ஆர்சி குஹத், நாகேஸ்வர் ராவ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நாடு முழுவதும் ஆய்வை மேற்கொண்ட இந்த சிறப்பு குழு, யூஜிசிக்கு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அதன்படி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு, தேசிய மற்றும் மாநில அளவில்  பொது நுழைவுத்தேர்வு நடத்தலாம் என தெரிவித்துள்ளது. ஊரடங்கு கால விடுமுறையை, பணி நாளாக கருத்தில் கொண்டு மாணவர்களை நேரடி தேர்வு எழுத அனுமதிக்கலாம் என்றும் நேரடி தேர்வுக்கு வாய்ப்பு  இல்லாத இடங்களில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யலாம் என சிறப்பு குழு யோசனை கூறியுள்ளது.  இந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து அடுத்த வாரம் பல்கலைக்கழக மானியக் குழு தனது அறிவிப்பை வெளியிட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்