"ஜோதிகாவின் கருத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" - நடிகர் சூர்யா

கோயில்களை போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்ற ஜோதிகாவின் கருத்தில் உறுதியாக உள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
x
விருது வழங்கும் விழா ஒன்றில் எப்போதோ ஜோதிகா பேசியது தற்போது செய்தியாகவும், விவாதமாகவும் மாறி உள்ளதாக சூர்யா தெரிவித்துள்ளார்.

இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீக பெரியவர்கள் கூறி இருப்பதாகவும், 

மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்கு செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த கருத்தை அனைத்து மதத்தினரும் வரவேற்பதாகவும்  சூர்யா தெரிவித்துள்ளார்.

 மதங்களை கடந்து மனிதமே முக்கியம் என்பதை எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி தர விரும்புவதாகவும், 

ஜோதிகா தெரிவித்த கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தங்களுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்