"பள்ளி வாசல்களுக்கு ரம்ஜான் அரிசி வழங்கலாம்" - அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிப்பு

ரம்ஜான் நோன்பையொட்டி கஞ்சி காய்ச்ச பள்ளி வாசல்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய பொது நலன் வழக்கை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பள்ளி வாசல்களுக்கு ரம்ஜான் அரிசி வழங்கலாம் - அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிப்பு
x
ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, தமிழகத்தில் உள்ள 2 ஆயிரத்து 895 பள்ளி வாசல்களுக்கு ஐந்தாயிரத்து 440 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து, இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றால நாதன், உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். 

ஊரடங்கு உத்தரவு காரணமாக பொது மக்களுக்கு அத்தியாவசிய தேவையான அரிசி கிடைப்பது கஷ்டமாக இருக்கும் சூழலில், குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும் அரிசி வழங்க முடிவெடுத்திருப்பது ஏற்க கூடியதாக இல்லை என மனுவில்  தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மாநிலம் முழுவதும்  தேவை உள்ள அனைத்து மக்களுக்கு அரிசி வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் இந்து முன்னணி மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இந்த மனுவை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார்  அமர்வு, மத ரீதியாக செயல்படும் அமைப்பின் சார்பில் பொது நலன் வழக்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துள்ளனர். 

குற்றாலநாதன் மனுவை தனிநபர் மனுவாக ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள்,  அனைவருக்கும் அரிசி வழங்க வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாக  வரும் 7 ஆம் தேதி அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்