ரவுடியை கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் : ரத்தம் சொட்ட சொட்ட தலையுடன் காவல் நிலையத்தில் சரண்

திருச்சியில் ரவுடி ஒருவரை கொடூரமாக கொன்ற கும்பல், ரத்தம் சொட்ட சொட்ட துண்டான தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரவுடியை கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம்  : ரத்தம் சொட்ட சொட்ட தலையுடன் காவல் நிலையத்தில் சரண்
x
திருச்சி ஸ்ரீரங்கம் கீழ அடையவளஞ்சான் பகவதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரமோகன். தலைவெட்டி சந்துரு என்றழைக்கப்படும் இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த அவரை காரில் வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டி சாய்த்தது. பின்னர் தலையை துண்டாக எடுத்து ரத்தம் சொட்ட சொட்ட காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதனை பார்த்து அதிர்ந்து போன போலீசார், சரண் அடைந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தினர். சுரேஷ், அவரின் அண்ணன் சரவணன், செல்வக்குமார் ஆகிய 3 பேரும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை செய்தது தெரியவந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சரவணனை சந்துரு வெட்டிய நிலையில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையால் தான் அந்த கும்பல் சந்துருவை கொடூரமாக வெட்டிக் கொன்றது தெரியவந்தது. சினிமா காட்சிகளை போல ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்