அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு தொகை - ஓராண்டுக்கு நிறுத்தி வைத்து தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புத் தொகையை ஓராண்டுக்கு நிறுத்தி வைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
x
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஒவ்வொரு ஆண்டும் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பு கொடுக்கப்படும். அந்த விடுப்பை எடுக்கவில்லை என்றால், அதை ஓராண்டுக்குள் 15 நாட்களுக்கும், 2 ஆண்டுகளுக்கு 30 நாட்களுக்கும் ஒப்படைப்பு செய்து பணமாக பெற்றுக்கொள்ளலாம். ஆனால் தற்போது கொரோனாவால் அரசுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கான ஈட்டிய விடுப்பு தொகையை ஓராண்டு காலத்திற்கு நிறுத்தி வைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதேநேரத்தில், ஓராண்டுக்கு பிறகு மீண்டும் அந்த தொகையை பெற்றுக்கொள்ளலாமா என்பது குறித்து அரசாணையில் விளக்கம் ஏதும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்