பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை - தமிழக அரசு உதவி எண்கள் அறிவிப்பு

குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்கள், மாவட்ட சமூக நல அலுவலர்கள் மற்றும் அருகில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களை தொடர்பு கொள்ளலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை - தமிழக அரசு உதவி எண்கள் அறிவிப்பு
x
குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்கள், மாவட்ட சமூக நல அலுவலர்கள் மற்றும் அருகில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களை  தொடர்பு கொள்ளலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், ஊரடங்கு காலத்தில் குடும்ப சண்டைகளும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் நடப்பது வருந்தத்தக்க போக்காகும் என குறிப்பிட்டுள்ளது. குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்களுக்கு தொலைபேசி மூலம் ஆற்றுப்படுத்துதல், மருத்துவ உதவி, குறுகிய கால தங்கும் வசதி மற்றும் சட்ட உதவி ஆகியவை, மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. பாதிக்கப்படும் பெண்கள், உடனடியாக பெண்கள் உதவி எண் 181, காவல் துறை உதவி எண் 1091 மற்றும் 122 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்