சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அவதி - பெற்றோரை காண துடிக்கும் பார்வையற்ற சிறுமி

ராமேஸ்வரத்தில் 40 நாட்களாக பெற்றோரை காண முடியாமல் தனிமையில் தவித்து வருவதாக பார்வையற்ற உத்தரபிரதேச சிறுமி கதறி அழுதது பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அவதி - பெற்றோரை காண துடிக்கும் பார்வையற்ற சிறுமி
x
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து ராமேஸ்வரத்தில் நடைபெற்ற ராம் கதா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 100க்கும் மேற்பட்டோர் ரயில் மூலமாக ராமேஸ்வரம் வந்தனர். இந்நிலையில் 144 தடை உத்தரவால் அவர்கள் தனியார் விடுதியில் தங்கி உள்ளனர். இவர்களில் பார்வையற்ற சிறுமி ஒருவர் தாம் தனிமையில் கஷ்டப்படுவதாகவும் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.  இதேபோல் ராமேஸ்வரத்திற்கு யாத்திரை மேற்கொண்டுள்ள  வடநாட்டு பெண் ஒருவர், கடந்த 40 நாட்களாக 4 வயது மகனை  காணமுடியாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்