காய்கறி சந்தையில் அலைமோதும் கூட்டம் - கொரோனா தொற்று பரவும் அபாயம்

தமிழகத்தில் மதுரை உட்பட ஐந்து மாநகராட்சிகளில் நாளை முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
காய்கறி சந்தையில் அலைமோதும் கூட்டம் - கொரோனா தொற்று பரவும் அபாயம்
x
தமிழகத்தில் மதுரை உட்பட ஐந்து மாநகராட்சிகளில் நாளை முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் மதுரை ஐயர் பங்களா பகுதியில் உள்ள காய்கறி சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக விலகலை கடைப்பிடிக்காமல் மக்கள் ஆவலுடன் பொருட்களை வாங்கி வருவதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் மக்கள் சமூக இடைவெளி விட்டு காய்கறிகளை வாங்கிச் செல்லுமாறு அறிவுரை வழங்குகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்