ஏப்ரல் 20க்குப் பின் கட்டுமானப் பணி அனுமதி - கிரெடாய் நிர்வாகிகளுடன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை

ஏப்ரல் 20ஆம் தேதிக்குப் பின் குறிப்பிட்ட சில கட்டுமானப் பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், கட்டுமான நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
ஏப்ரல் 20க்குப் பின் கட்டுமானப் பணி அனுமதி - கிரெடாய் நிர்வாகிகளுடன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை
x
ஏப்ரல் 20ஆம் தேதிக்குப் பின் குறிப்பிட்ட சில கட்டுமானப் பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், கட்டுமான நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.  கிரெடாய் அமைப்பின் தமிழக தலைவர் ஸ்ரீதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சரை சந்தித்தனர்.   எந்த கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி வழங்கலாம், பணியிடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.  இக்கூட்டத்தில் வீட்டுவசதிவாரிய செயலாளர் ராஜேஷ் லக்கானி, சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்