ஓய்வுபெற உள்ள மருத்துவர்களுக்கு பணி நீட்டிப்பு : 2 மாதங்களுக்கு தற்காலிக பணி நியமனம் வழங்க முடிவு

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ள நிலையில், ஓய்வு பெறும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ஓய்வுபெற உள்ள மருத்துவர்களுக்கு பணி நீட்டிப்பு : 2 மாதங்களுக்கு தற்காலிக பணி நியமனம் வழங்க முடிவு
x
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சமி தலைமையில் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மார்ச் 31 ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் பணி நீட்டிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து,  ஒப்பந்த முறையில் 2  மாதங்கள் பணி தொடருவதற்கான தற்காலிக பணி ஆணையை வழங்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்