கர்நாடகா மற்றும் கேரளாவிற்கு காய்கறி கொண்டு செல்லும் லாரிகளுக்கு அனுமதி அட்டை

சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா மற்றும் கேரளாவிற்கு காய்கறி கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களுக்கு வருவாய்த்துறை சார்பில் அனுமதி பாஸ் வழங்கும் முறை அமலுக்கு வந்தது.
கர்நாடகா மற்றும் கேரளாவிற்கு காய்கறி கொண்டு செல்லும் லாரிகளுக்கு அனுமதி அட்டை
x
காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் போது, கர்நாடகா மற்றும் கேரள மாநில எல்லைகளில் போலீசார் தடுத்து நிறுத்துவதாகவும், இதனால், பொருட்கள் குறித்த நேரத்திற்கு கொண்டுசெல்ல முடியவில்லை என லாரி ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டினர். இப்பிரச்சினைக்கு தீர்வு காணம் வகையில், சத்தியமங்கலம் பகுதியில் இருந்து கர்நாடகா மற்றும் கேரளாவிற்கு காய்கறி கொண்டு செல்லும் வாகனங்களுக்கு, சத்தியமங்கலம் மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள வருவாயத்துறை அதிகாரிகள் அனுமதி அட்டை வழங்கினர். பிற மாநில போலீசார் அறிந்துகொள்ளும் வகையில்,அந்த அனுமதி பாஸ் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்