கோயம்பேடு காய்கறி சந்தையில் குறைந்த மக்கள் கூட்டம்

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மக்கள் கூட்டம் வெகுவாக குறைந்த நிலையில் காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்தது.
கோயம்பேடு காய்கறி சந்தையில் குறைந்த மக்கள் கூட்டம்
x
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மக்கள் கூட்டம் வெகுவாக குறைந்த நிலையில் காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்தது. தடை உத்தரவின் காரணமாக பொதுமக்களின் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது. காய்கறிகள் வாங்க வரக்கூடிய பொதுமக்களுக்கு, நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம், சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகளுக்கு மாஸ்க் அணியவும், அவ்வப்போது கைகளை கழுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று கோயம்பேடு சந்தை, காலை 6 மணி முதல் மதியம் இரண்டரை மணி வரை மட்டுமே இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்