கொரோனா தாக்கம் - பாட்டி வைத்தியங்களை கடைப்பிடிக்கும் மக்கள்

கடலூர் மாவட்டம், இலநாங்கூர் கிராமத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கு அனைத்து வீடுகளிலும் பாட்டி வைத்தியங்களை பொது மக்கள் கடைபிடிக்கின்றனர்.
கொரோனா தாக்கம் - பாட்டி வைத்தியங்களை கடைப்பிடிக்கும் மக்கள்
x
கடலூர் மாவட்டம், இலநாங்கூர் கிராமத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கு அனைத்து வீடுகளிலும் பாட்டி வைத்தியங்களை பொது மக்கள் கடைபிடிக்கின்றனர். அதன் படி, வாசலில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் வேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் கலக்கிய நீரை வைத்து வீட்டிற்கு வருபவர்களிடம் கை கால்களை சுத்தமாக நீரில் கழுவ வேண்டும் என வலியுறுத்துகின்றனர். பின்னர் வீட்டிற்குள் வரும் முன் கீழாநெல்லி வேர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை தண்ணீரில் நன்றாக கொதிக்கவைத்து ஆற வைத்த வாய் கொப்பளிக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கேட்டு கொள்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்