கொரோனா முகாமிலிருந்து தப்பியவர் மீண்டும் முகாமிற்கு வந்தார்
மதுரையில் கொரோனா முகாமிலிருந்து தப்பியவர் மீண்டும் முகாமுக்கு வந்து பாதுகாப்பாக இருப்பதாக வாட்ஸ் அப் வீடியோ வெளியிட்டுள்ளார்.
துபாயில் இருந்து கடந்த 21ஆம் தேதி மதுரை வந்த சிவகங்கை மாவட்டம் வளையராதினிபட்டியைச் சேர்ந்த இளைஞர் விஜய், சின்ன உடைப்பு கொரோனா கண்காணிப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர், நண்பர்கள் உதவியோடு சினிமா பாணியில் தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. விசாரணையில் அவர், தனது பெண் தோழியை பார்ப்பதற்காக தப்பிச்சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து, அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி போலீசார் உதவியுடன், தனிபடை, அந்த இளைஞரை பிடித்து, மீண்டும் மதுரை முகாமுக்கு கொண்டு சென்றனர். இதனிடையே, தனக்கு கொரானா அறிகுறி இல்லை என்றும், முகாமிற்கே திரும்ப வந்து நலமாக இருப்பதாகவும் அவர் வாட்ஸ் அப் வீடியோ வெளிட்டுள்ளார்.
Next Story

