தமிழகத்தில் கொரோனா நிலவரம் என்ன?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 29 ஆக உயர்ந்துள்ள நிலையில் மாவட்ட வாரியாக எந்தெந்த மருத்துவமனைகளில் எவ்வளவு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதை தற்போது பார்க்கலாம்.
தமிழகத்தில் கொரோனா நிலவரம் என்ன?
x
* தமிழகத்தில்இதுவரை 1039 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில் 29 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

* சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில்  6  பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

* இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர்  தொடர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

* சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

* இதேபோல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

* இவை தவிர சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

* சென்னையை தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புகளை ஏற்படுத்திய இரண்டாவது மாவட்டமாக ஈரோடு உள்ளது.

* ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் 8 பேர் கிச்சை பெற்று வருகின்றனர்.

* இது தவிர கோயம்புத்தூர் இஎஸ்ஐ மருத்துவமனையில்  2 பேரும்,

*  திருநெல்வேலி,, ராணிப்பேட்டை, திருச்சி, மதுரை அரசு மருத்துவமனைகளில் தலா ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

* இதில் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* மேலும், துபாயில் இருந்து திருச்சி வந்த வேலூரை சேர்ந்தவருக்கு திருச்சி மருத்துவக் கல்லூரியிலும், லண்டனில் இருந்து சென்னைக்கு வந்த 24 வயது இளைஞர் மற்றும் 65 வயது பெண் ஆகிய இருவருக்கும் கொரோனோ வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்