ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் மாநிலம் முழுவதும் வரும் 1ஆம் தேதி முதல் அமல் - ​உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை, வரும் ஏப்ரல் 1 ம் தேதியில் இருந்து, மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என ​உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.
x
மத்திய அரசு, சில மாதங்களுக்கு முன், ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தின் மூலம், ஒரு கார்டு தாரர், நாட்டில் எந்த மூலையில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்றும் பொருட்களை பெறலாம். தமிழகத்தில், இத்திட்டம், சோதனை முயற்சியாக  நெல்லை மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில், கடந்த ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட்டன.இந்நிலையில்,  
உணவுத்துறை மானியக் கோரிக்கை மீதான  விவாதத்தின்போது பேசிய அமைச்சர் காமராஜ், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 30 லட்சம் ரேஷன் கார்டுகள் இருப்பதாகவும், இந்த திட்டத்தின் கீழ், 9 ஆயிரம் கார்டுதாரர்கள் பொருட்களை வாங்கியுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.  இதில் எவ்வித பிரச்னைகளும் ஏற்படவில்லை என்பதால் வரும் 1ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்  என்றும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்