தொடர் வீழ்ச்சியில் கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் சரிந்து ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 23 டாலராக வர்த்தகமாகி வருகிறது.
தொடர் வீழ்ச்சியில் கச்சா எண்ணெய் விலை
x
கடந்த 2 நாட்களாக  ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் 23  டாலருக்குள் வர்த்தகமாகி வருகிறது. குறைந்தபட்ச வீழ்ச்சியாக ஒரு பேரல் 20 டாலர் வரை வர்த்தகமானது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெளிநாட்டு, உள்நாட்டு போக்குவரத்து முடங்கி உள்ளதால், எரிபொருள்களின் தேவை குறைந்துள்ளது. இதையடுத்து கச்சா எண்ணெய் விலையில் கடும் சரிவு காணப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்த நிலையிலும், சில்லரை விற்பனையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் உள்ளது. கடந்த  வாரம் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 35 டாலரில் வர்த்தகமானபோது, பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 70 ரூபாயாக விற்பனையானது. அதையடுத்து மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது கூடுதலாக 3 ரூபாய் வரி உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் தற்போது  கச்சா எண்ணெய் ஒரு பேரல் 23 டாலராக குறைந்த நிலையிலும், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்