மீண்டும் ஒரு செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு - குழவி கல்லின் ஒரு பகுதி சிறிய பானை ஓடு கண்டுபிடிப்பு

சிவகங்கை அருகே கீழடியில் மீண்டும் ஒரு செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஒரு செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு - குழவி கல்லின் ஒரு பகுதி சிறிய பானை ஓடு கண்டுபிடிப்பு
x
சிவகங்கை அருகே கீழடியில் மீண்டும் ஒரு செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வின் போது நீதியம்மாளின் நிலத்தில் மிக நீண்ட தரை தளம் கண்டறியப்பட்டது. பின்னர்  பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கப்பட்ட 6-ம் கட்ட அகழாய்வின் போது அந்த தரை தளத்தின் தொடர்ச்சியும் கண்டறியப்பட்டது.தற்போது நீதியம்மாள் நிலத்தில் மூன்று குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.  இந்த நிலத்தின் மறு பகுதியில் பாசன தேவைக்காக பிளாஸ்டிக் குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது.  இதில் அகழாய்வு பணி நடந்து வரும் இடத்தின் 100 மீட்டர் தூரத்தில்  பள்ளம் தோண்டிய போது 2 அடி ஆழத்தில் தரை தளம் தென்பட்டுள்ளது. பள்ளத்தின் இருபுறமும் செங்கல் சுவர்களும் இருந்துள்ளன. தொடர்ச்சியாக தோண்டும் போது சிறிய குழவி கல்லின் ஒரு பகுதி மட்டும் கிடைத்துள்ளது. உட்புறம் கருப்பு வண்ணமும் வெளிப்புறம் சிவப்பு வண்ணமும் கொண்ட சிறிய பானை ஓடும் இதே பகுதியில் கிடைத்துள்ளது. 
--


Next Story

மேலும் செய்திகள்