"வேலைவாய்ப்பின்மை : எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?" - மக்களவையில் திமுக உறுப்பினர் ஆ.ராசா கேள்வி
நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை எதிர்கொள்ள எடுத்து வரும் நடவடிக்கைகள் என்னென்ன என்று, மத்திய அரசுக்கு மக்களவையில் திமுக உறுப்பினர் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை எதிர்கொள்ள எடுத்து வரும் நடவடிக்கைகள் என்னென்ன என்று, மத்திய அரசுக்கு மக்களவையில் திமுக உறுப்பினர் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை பிரச்சனை தலைவிரித்தாடுவதாக ராசா குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார், வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை எதிர்கொள்ள வலுவான கொள்கைகள் வகுக்கப்பட்டு உள்ளதாகவும், நடப்பு நிதி ஆண்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க, பட்ஜெட்டில் 9 லட்சத்து 9 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Next Story