கடன் பெற போலி ஆதார் கார்டுகள் தயாரிப்பு - பிரவுசிங் சென்டர்கள் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்
சிவகங்கையில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் உதவிக்காக சில பிரவுசிங் சென்டர்களில் போலி ஆதார் கார்டுகள் தயாரித்து கொடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், காஞ்சிரங்கால் மற்றும் காளையார்கோவில் பகுதியில் ஆதார் அட்டைகள், பல்வேறு இடங்களில் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சிவகங்கையை சேர்ந்த மகளிர் குழுவை சேர்ந்த சிலர், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், மூன்றாயிரம் ரூபாய் கடன் பெற்றுக்கொண்டு, சில பிரவுசிங் சென்டர்களில் சிலர், ஆதார் கார்டை ஸ்கேன் செய்து போட்டோஷாப் மூலம் மாற்றி கொள்வதாக கூறப்பட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்திட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

