மலேசியா,கொழும்பு,சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 53 லட்சம் மதிப்புள்ள 1.2 கிலோ தங்கம் பறிமுதல்

மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த ஷர்மிளா பானு என்பவர் உள்ளாடைக்குள் மறைத்து தங்கத்தை கடத்தியது சோதனையில் தெரிய வந்தது.
மலேசியா,கொழும்பு,சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 53 லட்சம் மதிப்புள்ள 1.2 கிலோ  தங்கம் பறிமுதல்
x
மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை  சேர்ந்த ஷர்மிளா பானு என்பவர் உள்ளாடைக்குள் மறைத்து தங்கத்தை கடத்தியது சோதனையில் தெரிய வந்தது. அவரிடம் இருந்த 20 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 468 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல, சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த கோவையை சேர்ந்த செல்வி சுப்பிரமணி என்பவர் கடத்தி வந்த 15 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள 350 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர். கொழும்பில் இருந்து வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த நைனா முகமது, ராவுத்தர் நைனா முகமது ஆகியோர் கடத்தி வந்த  387 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்