"பலம் எது, பலவீனம் எது என ஆராய்ந்து ரஜினி பேசியுள்ளார்" - தயாநிதி மாறன்

நடிகர் ரஜினிகாந்த் அவரது பலம் எது, பலவீனம் எது என்று ஆராய்ந்து பேசியிருப்பதாக திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
x
நடிகர் ரஜினிகாந்த் அவரது பலம் எது, பலவீனம் எது என்று ஆராய்ந்து பேசியிருப்பதாக திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். சென்னை யானைகவுனியில் திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற  கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்த தயாநிதி மாறன், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.  நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரலை என்று சொன்னவரை விட்டு விடுங்கள் என்றும், திரும்ப திரும்ப தொந்தரவு படுத்த வேண்டாம் என்றும் கூறியதோடு,  ரஜினி எங்கே இருந்தாலும் அவருக்கு வாழ்த்துக்கள் என்றும் தயாநிதி மாறன் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்