உயிரிழந்த மனநலம் பாதிக்கப்பட்ட 3 பேரின் சொத்தை அபகரித்ததாக பாதிரியார் மீது வழக்குப்பதிவு

உயிரிழந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் அவரது குடும்பத்தினரை ஏமாற்றி சொத்துக்களை அபகரித்ததாக பாதிரியார் மற்றும் அவரது மகன் உட்பட 3 பேர் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த மனநலம் பாதிக்கப்பட்ட 3 பேரின் சொத்தை அபகரித்ததாக  பாதிரியார் மீது வழக்குப்பதிவு
x
கரூர் மாவட்டம் ரெட்டிபாளையத்தை சேர்ந்த 68 வயதான கந்தசாமி கரூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில்,  சித்தப்பா மனைவி  நாச்சம்மாள் மற்றும் அவரது மகன் நல்லுசாமி, அவரது  மகள் பாப்பாயி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக அருகிலுள்ள சர்ச்சில் பாதிரியார் மோசஸ் துரைக்கண்ணு என்பவரின் பராமரிப்பில் வாழ்ந்து வந்ததாக தெரிவித்துள்ளார். 2018 முதல் அடுத்தடுத்து நல்லுசாமி, பாப்பாயி மற்றும் நாச்சம்மாள் ஆகியோர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், உறவினர்களுக்கு தெரிவிக்காமல் பாதிரியார் மோசஸ் துரைக்கண்ணு அவரது மகன் சாம்மங்கள்ராஜ், சர்ச்சில் பணிபுரியும் ராஜ்குமார் ஆகியோர் உடல்களை புதைத்து உள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். 

மேலும் நாச்சம்மாள் குடியிருந்த வீடு மற்றும்  பணம் நகை ஆகியவற்றை பாதிரியார் துரைக்கண்ணு அபகரித்து கொண்டதாகவும், இதுகுறித்து கேட்ட போது தங்களை மிரட்டுவதாகவும் கந்தசாமி தெரிவித்துள்ளார். மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் உத்தரவின்  பேரில் கரூர் நகர போலீசார், பாதிரியார் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்