நகைக்கடை ஊழியர்களிடம் பணம் பறிக்க முயன்ற வழக்கு: இரு தலைமை காவலர்களுக்கு ஓராண்டு சிறை

நகைக்கடை ஊழியர்களை தாக்கி 4 லட்ச ரூபாயை பறிக்க முயன்ற வழக்கில், இரண்டு தலைமைக் காவலர்களுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நகைக்கடை ஊழியர்களிடம் பணம் பறிக்க முயன்ற வழக்கு: இரு தலைமை காவலர்களுக்கு ஓராண்டு சிறை
x
மதுரை நகைக்கடை ஒன்றின்  ஊழியர்கள் சென்னையில் உள்ள சுரானா ஜுவல்லர்ஸில் நகை வாங்க 4 லட்ச ரூபாயுடன் சென்னை வந்துள்ளனர். அவர்களை வழிமறித்த மதுரை எஸ்.பி.சி.ஐ.டி. தலைமைக் காவலர் மீனாட்சி சுந்தரம் மற்றும் மதுரை திருமங்கலம் காவல் நிலைய தலைமைக் காவலர் பன்னீர்செல்வம் ஆகியோர் இருவரையும் மிரட்டி 4 லட்ச ரூபாயை பறிக்க முயன்றுள்ளனர். 

இதுதொடர்பான மேல்முறையீட்டு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இரண்டு தலைமைக் காவலர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனையும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி நிர்மல் குமார் உத்தரவிட்டார். மேலும் 6 பேரை விடுதலை செய்த கீழ் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்